திருவாரூரில் மது ஒழிப்பு போராளி மாரியம்மாள் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – மதிமுகவினர் மலர் தூவி மரியாதை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 7 November 2025

திருவாரூரில் மது ஒழிப்பு போராளி மாரியம்மாள் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – மதிமுகவினர் மலர் தூவி மரியாதை.


திருவாரூர், நவம்பர் 07 -

திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே மதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில், தலைவர் வைகோ அவர்களின் தாயார் மற்றும் மது ஒழிப்பு போராளி மாரியம்மாள் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அம்மையாரின் தியாகத்தையும் மது ஒழிப்பு போராட்டத்தில் அவருடைய பங்களிப்பையும் போற்றி, மதிமுக நிர்வாகிகள் கோஷமிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சி திருவாரூர் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். ஜெயராமன் தலைமையிலும், வடக்கு மாவட்ட பொருளாளர் காமராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் காசி சிவவடிவேல், துணை செயலாளர்கள் எல்.பி.எஸ். சரளா, கண்ணன் தாமரைசெல்வன், இலக்கிய அணி செயலாளர் கமலவேந்தன், ஒன்றிய கழக செயலாளர் கோபி, பொதுக்குழு உறுப்பினர்கள் அலிவலம் ராஜ், எல்.பி. சுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் தமிழ்ச்செல்வன், நகர பொருளாளர் கிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் த.ஹரிராஜன், தொண்டரணி உறுப்பினர்கள் மகேஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் இறுதியில், கலந்து கொண்ட அனைவருக்கும் திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் டி.ஆர். தமிழ்வாணன் நன்றி தெரிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad